/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உணவு அலுவலர் என்று கூறி பணம் பறித்த இளைஞர் கைது
/
உணவு அலுவலர் என்று கூறி பணம் பறித்த இளைஞர் கைது
ADDED : மார் 17, 2024 02:34 PM
சென்னிமலை: சென்னிமலை அருகே பனியம்பள்ளி, துலுக்கம்பாளைத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. வீட்டருகில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று கடையில் இருந்தபோது, ஒரு ஆசாமி டூவீலரில் வந்தார். உணவு பாதுகாப்பு அலுவலர் என்று கூறி, கடையில் பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்வதாக புகார் வந்ததால், சோதனை செய்ய வந்துள்ளேன் என கூறியுள்ளார்.
பிறகு வழக்குப்பதியாமல் இருக்க, கடையை சீல் வைக்காமல் இருக்க, 10 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டும் பாணியில் பேசியுள்ளார். இதனால், ௧௦ ஆயிரம் ரூபாயை கொடுத்த கருப்புசாமி, வாலிபரிடம் அடையாள அட்டையை காட்டுமாறு கேட்டபோது, டூவீலர் ஏறி பறந்து விட்டார்.
இதுகுறித்து சென்னிமலை போலீசில் புகார் செய்தார். விசாரணையில், ஈரோடு, சூரம்பட்டி அணைக்கட்டு வீதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் மகன் நவீன்குமார், 29, பணம் பறித்து சென்றதை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். பெருந்துறை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

