/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரிசர்வ் வங்கி' பெயரில் ரூ.20 கோடி மோசடி பொம்மிடி வாலிபருக்கு 'காப்பு'
/
ரிசர்வ் வங்கி' பெயரில் ரூ.20 கோடி மோசடி பொம்மிடி வாலிபருக்கு 'காப்பு'
ரிசர்வ் வங்கி' பெயரில் ரூ.20 கோடி மோசடி பொம்மிடி வாலிபருக்கு 'காப்பு'
ரிசர்வ் வங்கி' பெயரில் ரூ.20 கோடி மோசடி பொம்மிடி வாலிபருக்கு 'காப்பு'
ADDED : ஆக 10, 2025 02:24 AM
சேலம், 'ரிசர்வ் வங்கி' பெயரில், 20 கோடி ரூபாய் மோசடி செய்த பொம்மிடி வாலிபரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.'ரிசர்வ் வங்கி அதிகாரிகள்' என கூறி சிலர், மத்திய அரசிடம் இருந்து, 'இரிடியம், காப்பர்' விற்பனைக்கு உள்ளதாக தெரிவித்து, அதற்கு முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என, மக்களை நம்ப வைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளனர். இதுதொடர்பாக சேலம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர். அதில் சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில், 150 பேர் பாதிக்கப்பட்டு, 13 கோடி ரூபாய் மோசடி நடத்தது தெரிந்தது. இதுதொடர்பாக, தமிழகம், பிற மாநிலங்களை சேர்ந்த, 12 பேர் கைது செய்யப்பட்டு, மற்றவர்களை தேடுகின்றனர்.
இந்நிலையில், தர்மபுரி, பொம்மிடியை சேர்ந்த மாரிமுத்து, 45, என்பவர், ரிசர்வ் வங்கியிடம் இருந்து, 15,000 கோடி ரூபாய் அளவுக்கு, 'இரிடியம்' விற்க அனுமதி பெற்றுள்ளதாக கூறி தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோரிடம், போலி ஆவணங்களை காட்டி, 20 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் நேற்று, அவரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே திருச்சி சி.பி.சி.ஐ.டி., போலீசார்
வழக்குப்பதிந்துள்ளனர்.