ADDED : ஜூலை 16, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சேலம் மத்திய சிறை அருகே நேற்று சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரது கார் அருகே, பைக்கில் சென்ற ஒருவர், மயங்கி விழுந்தார்.
இதை பார்த்த அமைச்சர், காரை நிறுத்தி இறங்கி, மயங்கிய நபருக்கு தண்ணீர், உணவு வழங்கி, ஆம்புலன்ைஸ வரவழைத்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்ததில், விபத்துக்குள்ளானவர், அய்யந்திருமாளிகையை சேர்ந்த சரவணன் என தெரிந்தது. தொடர்ந்து அவரை, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.