/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சித்தானுார் ஊராட்சி அலுவலக கட்டட பணி இழுபறி: சமுதாய கூடத்தில் இயங்குவதால் மக்கள் பாதிப்பு

ADDED : ஜூன் 20, 2024 04:49 AM
தேவகோட்டை: கண்ணங்குடி ஒன்றியம் சித்தானுார் ஊராட்சி அலுவலக கட்டட பணி மந்தமாக நடந்து வருவதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
தேவகோட்டை நகரை ஒட்டியுள்ளது கண்ணங்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த சித்தானுார் ஊராட்சி. இந்த ஊராட்சியில் சித்தானுார், கரையகோட்டை, ராஜாக்கோட்டை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. 500 குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சி அலுவலக கட்டடம் மிகவும் பழைய கட்டடத்தில் இயங்கி வந்தது. புதிய கட்டடம் கட்ட முடிவு செய்து பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தை இடித்து விட்டனர். அலுவலகமும் தற்காலிகமாக சமுதாயக்கூடத்திற்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. சமுதாயக்கூடத்தில் அடிக்கடி விசேஷங்கள் நடக்கும் சூழலில் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது.
கட்டடத்தை இடித்ததை தொடர்ந்து அதே இடத்தில் 2022 ம் ஆண்டு ரூ. 42 லட்சத்து 50 ஆயிரத்தில் அனைத்து வசதிகளுடன் கட்டடம் கட்ட மதிப்பீடு தயார் செய்து பணிகளை துவக்கினர். இரண்டு ஆண்டுகளாகியும் பணி இழுத்துக் கொண்டே இருக்கிறது.
ஊராட்சி அலுவலகத்தில் விசாரித்த போது கட்டட பணிக்கு ஒன்றிய அலுவலகத்தில் பணம் சரியாக வராததால் பணிகள் கிடப்பில் இருப்பதாக கான்ட்ராக்டர் கூறியுள்ளாராம். ஏற்கனவே மூன்று மாதங்கள் ஒரு பணியும் நடக்காமல் நின்று விட்டது. பிரதிநிதிகள் வற்புறுத்தலை தொடர்ந்து பணி துவங்கி இப்போது ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இன்னும் மூன்று மாதங்களில் இப்போது உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி காலம் முடிய உள்ளது. அதற்குள்ளாக புதிய அலுவலக பணி முடிந்து புதிய கட்டடத்தில் அலுவலகம் செயல்பட வேண்டும் என உள்ளாட்சி பிரதிநிதிகள் எதிர்பார்க்கின்றனர்.