sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

‛டிஜிட்டல் ஜி.பி.எஸ்., கருவி மூலம் சருகணி ஆறு, நிலம் அளவீடு   ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை   

/

‛டிஜிட்டல் ஜி.பி.எஸ்., கருவி மூலம் சருகணி ஆறு, நிலம் அளவீடு   ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை   

‛டிஜிட்டல் ஜி.பி.எஸ்., கருவி மூலம் சருகணி ஆறு, நிலம் அளவீடு   ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை   

‛டிஜிட்டல் ஜி.பி.எஸ்., கருவி மூலம் சருகணி ஆறு, நிலம் அளவீடு   ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை   


ADDED : ஆக 23, 2024 04:16 AM

Google News

ADDED : ஆக 23, 2024 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சருகணி ஆறு ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கடந்த 10 ஆண்டாக விவசாயிகள் வைத்த கோரிக்கைக்கு, விடிவு காலம் பிறக்கும் விதமாக டிஜிட்டல் ஜி.பி.எஸ்., கருவி மூலம் ஆக்கிரமிப்பு நிலம் அளவீடு செய்து, அகற்ற கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை அருகே அலவாக்கோட்டையில் உள்ள அலவாக்காண்மாய்க்கு, பல்வேறு பகுதியில் உள்ள 20 க்கும் மேற்பட்ட கண்மாய்களில் இருந்து வெளியேறும் உபரி நீர், அலவாக் கண்மாய்க்குள் சேகரமாகும்.

இங்கிருந்து தான் நகரம்பட்டி, பாகனேரி வழியாக தேவகோட்டை அருகே சருகணி வரை 21 கி.மீ., துாரத்திற்கு ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் மூலம் 126 கண்மாய்களில் மழை நீர் சேகரமாகி, சிவகங்கை முதல் தேவகோட்டை வரை உள்ள 2 ஆயிரம் எக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

இச்சிறப்பு பெற்ற சருகணி ஆறு ஆக்கிரமிப்பால் சுருங்கி, மழை நீர் சேகரமாகாத வகையில் வறண்டு காணப்படுகிறது.

எனவே சருகணி ஆற்றை காப்பாற்றும் நோக்கில், நீர்நிலை பாதுகாப்பு இயக்கத்தை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கிருஷ்ணன் துவக்கினார்.

தொடர்ந்து 10 ஆண்டுகளாக இங்கு பணிபுரிந்து வந்த கலெக்டர்களிடம் வலியுறுத்தி வந்தார்.

இறுதியாக தற்போதுள்ள கலெக்டர் ஆஷா ஆஜித், சருகணி ஆற்றை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுக்கும் நோக்கில், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள், ஊராட்சி தலைவர்கள், வருவாய், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.

முடிவில், சருகணி ஆறு தோன்றும் அலவாக்கண்மாயில் இருந்து தேவகோட்டை அருகே சருகணி வரை 21 கி.மீ., துாரமுள்ள ஆற்றின் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 'டிஜிடல் ஜி.பி.எஸ்., கருவி' மூலம் நில அளவீடு செய்து அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை, அடுத்த வாரத்தில் துவக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆலோசனை கூட்டத்தில் சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார், தாசில்தார்கள் சிவகங்கை சிவராமன், காரைக்குடி ராஜா, காளையார்கோவில் முபாரக் உசேன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கேசவதாசன், பொதுப்பணித்துறை உதவி கோட்ட பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர்கள் முத்துராமலிங்கம், அமுதசுரபி, பிரகாஷ், நீர்நிலை பாதுகாப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கிருஷ்ணன், ஊராட்சி தலைவர்கள், சேதுபாஸ்கரா வேளாண் கல்லுாரி தாளாளர் சேதுகுமணன் உட்பட விவசாயிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us