நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : வேம்பத்துாரில் கைலாசநாதர், ஆவுடைய நாயகி அம்மன் கோயில் வளாகத்தில் தினந்தோறும் சைவ நன்னெறி மற்றும் திருவாசக இசை பயிற்சி, திருவிளையாடல் புராண விளக்க உரை நடைபெற்று வருகிறது.
இதில் வேம்பத்துார் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கின்றனர். மாணவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் கல்வி உபகரணம் இலவசமாக வழங்கப்படுகிறது.

