/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வட்டார மேம்பாடு திட்டம் துவக்கம்
/
வட்டார மேம்பாடு திட்டம் துவக்கம்
ADDED : ஜூலை 05, 2024 11:43 PM
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியத்தில் வட்டார மேம்பாடு திட்டத்தின் கீழ் திட்ட துவக்க விழா, அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
சிவகங்கை மாவட்டத்தில் சமூக பொருளாதார அடிப்படையில் பின் தங்கிய வட்டாரங்களாக திருப்புவனம், திருப்புத்துார் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மூன்று நிதியாண்டுகளுக்கான செயல்பாடுத் திட்டங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பயிற்சியை தொடர்புடைய துறைகளின் தாலுகா, ஒன்றிய, பேரூராட்சி அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
துணைத் தலைவர் மீனாள் வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். ஆணையாளர் சத்தியன் வரவேற்றார். நிதி ஆயோக் திட்ட அலுவலர் ரூபேஷ்சிங் குத்துவிளக்கேற்றி திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். மாவட்ட திட்ட அலுவலர் கலை செல்வராஜன், நிதி ஆயோக் திட்ட அலுவலர் ரூபேஷ்சிங் திட்டம் குறித்து விளக்கினர்.