/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தண்ணீர் தேடி வரும் மான்களை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்குமா
/
தண்ணீர் தேடி வரும் மான்களை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்குமா
தண்ணீர் தேடி வரும் மான்களை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்குமா
தண்ணீர் தேடி வரும் மான்களை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்குமா
ADDED : ஏப் 28, 2024 06:04 AM
காரைக்குடி : காரைக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தண்ணீர் தேடி வரும் மான்களை நாய்கள் துரத்துவதால் குட்டி மான்கள் தாயைப் பிரிந்து அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
காரைக்குடி, சங்கரன்கோட்டை, பாரிநகர், ஆவுடைப் பொய்கை சாக்கோட்டை, சங்கன்திடல் வனப் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மான்கள் உள்ளன.
வழக்கத்தைவிட மான்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், வெயிலும் அதிகளவில் வாட்டி வதைக்கிறது. வனப்பகுதியில் தண்ணீர் இல்லாததால் மான்கள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து விடுகிறது.
தண்ணீர் தேடி வரும் மான்கள் விபத்தில் சிக்கியும், நாய்கள் கடித்தும் உயிரிழந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.
மான்கள் குட்டிகளுடன் தண்ணீர் தேடி பாரி நகர் குடியிருப்புக்கு வரும்போது அங்கு கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் நாய்கள் மானை துரத்துகிறது.
உயிரை காத்துக் கொள்ள மான் ஒரு பக்கமும் குட்டி ஒரு பக்கமும் தப்பி ஓடுகிறது. இதனால், தாயைப் பிரிந்த மான்குட்டி தனியாக தவிக்கிறது.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில்: மான்களை வேட்டையாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் ஆர்வம் காட்டும் வனத்துறை மான்களை காப்பாற்றுவதிலும் ஆர்வம் காட்ட வேண்டும்.
காட்டுப்பகுதியில் குளங்கள் அமைத்து முறையாக தண்ணீர் நிரப்பி மான்களை காப்பாற்ற வேண்டும்.
தண்ணீர் தேடி வரும் மான்கள் சில நாய்கள் கடித்து பலியாகிறது. இதனை தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

