/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஓட்டுச்சாவடிக்கு தலா 100 தொண்டர்கள்; ஓட்டு சேகரிக்க அ.தி.மு.க., தீவிரம்

ADDED : ஏப் 12, 2024 10:48 PM
சிவகங்கை : சிவகங்கை தொகுதியில் பா.ஜ., தேவநாதன், காங்., கார்த்தி எம்.பி., அ.தி.மு.க.,- சேவியர் தாஸ்,நாம் தமிழர் - எழிலரசி, பகுஜன் சமாஜ் - ரஞ்சித்குமார் மற்றும் சுயேச்சைகள் உட்பட 20 பேர் போட்டியிடுகின்றனர்.
இரு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் நோட்டாவுடன் கூடிய 21 சின்னங்கள் பொருத்தியுள்ளனர். வாக்காளர்கள் எளிதில் ஓட்டளிக்க ஏதுவாக, அந்தந்த வேட்பாளர்கள் தாங்களது பெயர், சின்னம் இருக்கும் இடத்தை குறிப்பிட்டு ஓட்டு சேகரித்து வருகின்றனர்.
இதில், அ.தி.மு.க., சற்று வித்தியாசமாக, ஓட்டுப்பதிவிற்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட 16 லட்சத்து 23 ஆயிரத்து 408 வாக்காளர்களிடமும், நேரடியாக கள பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக அமைக்கப்பட்டுள்ள 1873 ஓட்டுச்சாவடிகளில், ஒரு ஓட்டுச்சாவடிக்கு 100 தொண்டர்கள் வீதம் நியமிக்கப்பட்டு, அவர்கள் வீடுகள் தோறும் சென்று அ.தி.மு.க.,விற்கு ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.