/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
உயர்கல்விக்கு செல்லாத 2297 பேர் கல்வி அதிகாரிகள் ஆய்வில் தகவல்
/
உயர்கல்விக்கு செல்லாத 2297 பேர் கல்வி அதிகாரிகள் ஆய்வில் தகவல்
உயர்கல்விக்கு செல்லாத 2297 பேர் கல்வி அதிகாரிகள் ஆய்வில் தகவல்
உயர்கல்விக்கு செல்லாத 2297 பேர் கல்வி அதிகாரிகள் ஆய்வில் தகவல்
ADDED : செப் 12, 2024 04:50 AM
சிவகங்கை: கடந்த ஆண்டு (2023- - 2024) பிளஸ் 2ல் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 3,351 மாணவர்கள் உயர்கல்விக்கு சென்றுள்ளனர். எஞ்சிய 2,297 பேர் செல்லவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்ட அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில் கடந்த கல்வி ஆண்டில் (2023- - 2024) பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 6,754 பேர் பிளஸ் 1 சேர்ந்துள்ளனர்.
பாலிடெக்னிக் 237 பேர், ஐ.டி.ஐ.,யில் 148 பேர், சான்றிதழ் படிப்பில் 387 பேர் சேர்ந்துள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களில் 280 பேர் பிளஸ் 2, பாலிடெக்னிக் உள்ளிட்ட உயர்கல்விக்கு செல்லவில்லை.
அதே போன்று அரசு மேல்நிலை பள்ளிகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களில் எம்.பி.பி.எஸ்.,-ல் 18 பேர், பொறியியல் படிப்பில் 341, விவசாய படிப்பில் 55 பேர், கலை அறிவியல் கல்லுாரியில் 2,711 பேர், சட்டப்படிப்பில் 39 பேர், பாரா மெடிக்கல் படிப்பில் 44 பேர், பாலிடெக்னிக்கில் 39 பேர், சான்றிதழ் படிப்பில் 102 பேர், பிற பட்டப்படிப்பில் 2 பேர் என 3,351 மாணவர்கள் உயர்கல்விக்கு சென்றுள்ளனர். பிளஸ் 2 தேர்ச்சிக்கு பின் கடந்த ஆண்டு 2,297 மாணவர்கள் உயர்கல்விக்கு செல்லவில்லை என கண்டறிந்துள்ளனர்.

