/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
லஞ்ச வழக்கில் வி.ஏ.ஓ.,வுக்கு '3 ஆண்டு'
/
லஞ்ச வழக்கில் வி.ஏ.ஓ.,வுக்கு '3 ஆண்டு'
ADDED : ஆக 27, 2024 11:44 PM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் அருகே மகிபாலன்பட்டியைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார். இவர், 2008ல் தன் இடத்தில் கோழிப்பண்ணை அமைக்க திட்டமிட்டார். இதற்காக வங்கி கடன் பெற அவருக்கு நிலம் தொடர்பான புல வரைபடம், பட்டா உள்ளிட்டவை தேவைப்பட்டன.
இதற்காக வேலங்குடி வி.ஏ.ஓ., வாக இருந்த காந்தியை அணுகினார். அதற்கு வி.ஏ.ஓ., 500 ரூபாய் லஞ்சம் கேட்டார். செந்தில்குமார் போலீசில் புகார் அளித்தார்.
மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின்படி, பணத்தை வி.ஏ.ஓ., காந்தியிடம் செந்தில்குமார் கொடுத்தபோது, போலீசார் காந்தியை கைது செய்தனர்.
சிவகங்கை லஞ்ச வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி செந்தில்முரளி வழக்கை விசாரித்து, காந்திக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

