/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தோட்டக்கலை இயக்க திட்டத்தில் மானியம் வழங்க ரூ.374 கோடி: கலெக்டர் ஆஷா அஜித் தகவல்

ADDED : ஆக 02, 2024 06:42 AM
சிவகங்கை : தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியம் வழங்க அரசு ரூ.374 கோடி ஒதுக்கியுள்ளதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் மா பரப்பு, வீரிய ஒட்டு ரக காய்கறி, கொய்யா, பப்பாளி, பலா,நெல்லி, முந்திரி, மல்லிகை, சம்பங்கி பரப்பை விரிவாக்கம் செய்யவும், பழைய தோட்டத்தை புதுப்பித்தல், பசுமைக்குடில், நிழல்வலை கூடம் அமைத்தல், தேனீ வளர்ப்பு, பண்ணைக்குட்டை, சிப்பம் கட்டும் அறை, வெங்காய சேமிப்பு கிடங்கு அமைத்தல், சீமை கருவேல் மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்வதற்கு மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா அடங்கல்,ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, நில வரைபடம், 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, மண், நீர் பரிசோதனை அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் 'https://tnhorticulture.tn.gov.in/tnhortnet'' என்ற இணையதளத்திலும், நேரடியாக அந்தந்த தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்திலும் பதிவு செய்து பயன்பெறலாம், என்றார்.