/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரோட்டோரம் வீசப்பட்ட 6 மாத பெண் குழந்தை மீட்பு
/
ரோட்டோரம் வீசப்பட்ட 6 மாத பெண் குழந்தை மீட்பு
ADDED : பிப் 25, 2025 07:08 AM
திண்டுக்கல் : ரோட்டோரத்தில் வீசப்பட்ட ஆறு மாத பெண் குழந்தைக்கு, அரசு டாக்டர்கள் சிகிச்சையளித்து குழந்தைகள் நலத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே குல்லலக்குண்டு பகுதியில் பிப்., 15ல் ஆதரவற்றோர் இல்லம் அருகே ரோட்டோரம் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆறு மாத பெண் குழந்தை கேட்பாரற்று கிடந்தது.
நிலக்கோட்டை போலீசார் குழந்தையை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். டாக்டர்கள் பரிசோதித்த போது, குழந்தை உடலில் லேசான காயங்கள், காய்ச்சல் இருந்தது தெரிந்தது. இதையடுத்து, 9 நாட்கள், அந்த குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
குழந்தை உடல்நலம் தேறியதால், மாவட்ட குழந்தைகள் நலப்பிரிவு அலுவலர் சத்தியநாராயணன் தலைமையிலான அதிகாரிகளிடம், நேற்று குழந்தை ஒப்படைக்கப்பட்டது. ஈரோடு குழந்தைகள் தத்து மையத்தில், குழந்தை பராமரிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.