sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் ஏராளமானோர் பங்கேற்பு

/

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் ஏராளமானோர் பங்கேற்பு

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் ஏராளமானோர் பங்கேற்பு

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் ஏராளமானோர் பங்கேற்பு


ADDED : ஆக 23, 2024 02:57 AM

Google News

ADDED : ஆக 23, 2024 02:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி,:சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

முத்துமாரியம்மன் கோயிலில் 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த மூன்று நிலை ராஜகோபுரம் அகற்றப்பட்டு புதிதாக 7 நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. அதையடுத்து 24 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகத்துக்காக மராமத்து பணிகள் நடந்தன. இப்பணிகள் நிறைவுற்றதையடுத்து ஆக. 19 கும்பாபிேஷக யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கியது.

தொடர்ந்து 3 நாட்கள் ஐந்து கால யாகசாலை பூஜைகளை பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்தினர். நேற்று அதிகாலை 5:30 மணிக்கு 6ம் கால யாகசாலை பூஜை துவங்கி பூர்ணாஹூதி நடந்து புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் யாகசாலையில் இருந்து ராஜ கோபுரத்திற்கும் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கும் கொண்டு சென்றனர். காலை 9:05 மணிக்கு அனைத்து கோபுரங்களிலும் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் பூஜைகள் நடந்தன.






      Dinamalar
      Follow us