/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இணைப்புச் சாலையில் தொடர் விபத்துக்கள்
/
இணைப்புச் சாலையில் தொடர் விபத்துக்கள்
ADDED : மார் 27, 2024 06:51 AM
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே மாவட்ட இணைப்புச் சாலை குறுகலாக இருப்பதால் தினமும் விபத்துக்கள் நடக்கிறது.
இவ்வொன்றியத்தில் அரளிக்கோட்டையில் இருந்து ஏரியூர் வழியாக மதுரை மாவட்டம் கீழவளவு செல்லும் சாலை சில ஆண்டுகளுக்கு முன்பு இருபுறமும் அகலப்படுத்தப்பட்டது. ஆனால் எஸ்.மாம்பட்டி எல்லையில் இருந்து ஜெயங்கொண்ட நிலை வரை 5 கி.மீ., துாரத்திற்கு ஒரு பக்கம் மட்டும் அகலப்படுத்தப்பட்டு விடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் தினசரி விபத்து நடக்கிறது.
இப்பகுதியில் மணல் குவாரிகள் இருக்கும் நிலையில் டிப்பர் லாரிகளின் போக்குவரத்து அதிகமாக உள்ளது. குறிப்பிட்ட அந்த இடத்தில் கனரக வாகனங்கள் வரும்போது வழிவிட முடியாமல் டூவீலர்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே எஸ்.மாம்பட்டியில் இருந்து ஜெயங்கொண்டம் வரையிலான சாலையின் மற்றொரு புறத்தையும் அகலப்படுத்தி விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

