/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வலியால் துடித்த கோயில் மாடு; அலட்சியத்தால் உயிரிழந்த கன்று
/
வலியால் துடித்த கோயில் மாடு; அலட்சியத்தால் உயிரிழந்த கன்று
வலியால் துடித்த கோயில் மாடு; அலட்சியத்தால் உயிரிழந்த கன்று
வலியால் துடித்த கோயில் மாடு; அலட்சியத்தால் உயிரிழந்த கன்று
ADDED : ஜூலை 06, 2024 05:49 AM

திருப்புவனம் : திருப்புவனம் மார்க்கெட் வீதியில் பிரசவ வலியால் நாள் முழுவதும் துடித்த கோயில் மாடு குறித்து தகவல் கொடுத்தும் கால்நடை டாக்டர்கள் கண்டு கொள்ளாததால் கன்று உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்புவனம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட கோயில் மாடுகள் வலம் வருகின்றன. தினசரி காய்கறி மார்க்கெட், வாரச்சந்தை ஆகிய பகுதிகளில் காய்கறி கழிவுகளை உண்டு வளரும் இவை கூட்டம் கூட்டமாக நகரில் வலம் வருகிறது. சினை பிடிக்கும் கோயில் மாடுகளுக்கு போதிய தடுப்பூசி, மருந்து வழங்கப்படுவதில்லை.
நேற்று முன்தினம் இரவில் கோயில் மாடு ஒன்று கன்றை பிரசவிக்க முடியாமல் வலியால் துடித்தது. நேற்று காலை 11:00 மணிக்கு அப்பகுதிக்கு வந்த இளைஞர்கள் முயன்றும் கன்று வெளியே வரவில்லை.
கால்நடை துறை ஆம்புலன்ஸ்க்கு போன் செய்த போது காரைக்குடியில் இருப்பதாகவும் வருவதற்கு இரண்டு மணி நேரமாகும் என தகவல் தெரிவித்தனர்.
கால்நடை மருத்துவர்களுக்கு அலைபேசியில் தொடர்பு கொண்ட போது திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மீட்டிங்கில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இளைஞர்கள் வலியால் துடித்த பசுவை சரக்கு வாகனத்தில் ஏற்றி மதுரை தல்லாகுளம் கால்நடை மருந்தகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சையளிக்க வந்த மருத்துவர் கன்றை கொக்கி மாட்டி இழுக்க முயன்ற போது வலிப்பு ஏற்பட்டு அவரும் மயங்கி விழுந்துள்ளார்.
பசுமாட்டை கொண்டு சென்ற இளைஞர்களே வேறு வழியின்றி பிரசவம் பார்த்த போது கன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.