/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை-சென்னைக்கு கூடுதல் பஸ் பயணிகள் எதிர்பார்ப்பு
/
சிவகங்கை-சென்னைக்கு கூடுதல் பஸ் பயணிகள் எதிர்பார்ப்பு
சிவகங்கை-சென்னைக்கு கூடுதல் பஸ் பயணிகள் எதிர்பார்ப்பு
சிவகங்கை-சென்னைக்கு கூடுதல் பஸ் பயணிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 13, 2024 05:58 AM
சிவகங்கை: சிவகங்கையில் இருந்து சென்னைக்கு கூடுதல்பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் சிவகங்கையிலிருந்து இரவு 7:45 மணிக்கு ஒரு பஸ்சும், கமுதியில் இருந்து 8:15க்கு வரக்கூடிய பஸ், சாயல்குடியில் இருந்து 8:45 மணிக்கு வரக்கூடிய பஸ் என 3 பஸ்கள் சென்னைக்கு தினசரி இயக்கப்படுகிறது.
இதில் கட்டணமாக குறைந்த பட்சம் 420 முதல் 450 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. தினமும் 135 பயணிகள் மட்டுமே செல்ல முடியும். ஆனால் சிவகங்கை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினசரி 500க்கும் மேற்பட்டோர் தனியார் பஸ் மூலமாகவும், மதுரை வழியாகவும் சென்னை செல்கின்றனர்.
இது தவிர சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளி, பொறியியல் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள், கம்ப்யூட்டர் தொழில் பூங்காக்களில் பணிபுரியும் ஊழியர்கள், மாதந்தோறும் சொந்த ஊர் வந்து செல்கின்றனர். தற்போது இயங்கும் மூன்று பஸ்களில் இடம் கிடைப்பதில்லை. தனியார் பஸ்களிலும் இடம் இருப்பதில்லை. சிவகங்கையில் இருந்து சென்னை செல்லும் பயணிகளின் சிரமங்களை தவிர்க்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.
அரசு போக்குவரத்து கழக அதிகாரி கூறுகையில், தினமும் 3 பஸ்கள் இயக்கப்படுகிறது. தற்போது ஒன்றும் பிரச்னை இல்லை. ஞயிற்றுக்கிழமை மட்டும் கூடுதலாக சிவகங்கையில் இருந்து ஒரு பஸ் இயக்கப்படுகிறது. கூட்டத்திற்கு தகுந்தாற் போல் பஸ்கள் இயக்கப்படும் என்றார்.