/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஓட்டுப்பதிவன்று முகவர்கள் கட்சி வேட்பாளர் பெயர், சின்னம் அணிய தடை
/
ஓட்டுப்பதிவன்று முகவர்கள் கட்சி வேட்பாளர் பெயர், சின்னம் அணிய தடை
ஓட்டுப்பதிவன்று முகவர்கள் கட்சி வேட்பாளர் பெயர், சின்னம் அணிய தடை
ஓட்டுப்பதிவன்று முகவர்கள் கட்சி வேட்பாளர் பெயர், சின்னம் அணிய தடை
ADDED : மார் 31, 2024 11:41 PM
சிவகங்கை : ஓட்டுச்சாவடி ஏஜன்ட்கள் சட்டையில் அணியும் அடையாள அட்டையில் கட்சி, வேட்பாளர் பெயர், சின்னம் இருக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை லோக்சபா தொகுதியில் சிவகங்கை, மானாமதுரை (தனி), திருப்புத்துார், காரைக்குடி, திருமயம், ஆலங்குடி ஆகிய 6 சட்டசபை தொகுதியில் 16 லட்சத்து 23 ஆயிரத்து 408 வாக்காளர்கள் 1873 ஓட்டுச்சாவடியில் ஏப்., 19 அன்று ஓட்டளிக்க உள்ளனர். இத்தொகுதியில் 162 ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
ஓட்டுப்பதிவன்று ஓட்டுச்சாவடிகளில் கட்சி ஏஜன்ட்களாக இருப்பவர்கள், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் கண்டிப்பாக சட்டையில் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். அதில் எக்காரணம் கொண்டும் கட்சியின் சின்னம், பெயர், வேட்பாளர் பெயர் குறிப்பிடக்கூடாது.
அதே போன்று கட்சியினர் வாக்காளர்களுக்கு வழங்கும் ஓட்டுச்சீட்டில்கட்சி, வேட்பாளர் பெயர், சின்னம் போன்றவற்றை குறிப்பிடக்கூடாது.வெள்ளை நிற சீட்டில் வாக்காளர் பெயர், பாகம் எண், ஓட்டுச்சாவடி எண் போன்ற விபரங்கள் மட்டுமே இடம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.