ADDED : ஆக 21, 2024 07:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லுாரியில் அக்னி வீர் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. திருச்சியில் உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்த்துறைத் தலைவர் துரை வரவேற்றார்.
இதில், நாயக் சுபேதார் சவுத்ரி, அக்னிவீர் சேர்க்கை குறித்தும், அக்னி வீர் திட்டத்தின் பலன்கள் குறித்தும், பணி வாய்ப்பு குறித்தும் பேசினார். தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் சரவணன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தார். ஹவில்தார் டிஹோல் மனோஜ் மற்றும் பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

