/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க., தவம் இருக்கவில்லை நத்தம் விஸ்வநாதன் பேட்டி

ADDED : மார் 09, 2025 02:46 AM
சிவகங்கை: வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க., தவம் இருக்கவில்லை என சிவகங்கையில் நடந்த ஜெ., பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், தமிழக முதல்வர் கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டம் ஒரு நாடகம் என்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்தில் தவறேதும் இல்லை. தி.மு.க., ஆர்.எஸ்.பாரதி பக்குவம் இல்லாதவர்.
அவர் தி.மு.க., அழிவிற்கு பெரும் பங்காற்றி வருகிறார்.
லோக்சபா தொகுதி மறு சீரமைப்பில் தமிழகத்திற்கு ஒரு இடம் கூட குறையக்கூடாது என்பதில் அ.தி.மு.க., உறுதியாக உள்ளது. பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க., தவம் இருக்கவில்லை. பா.ஜ., உடன் கூட்டணி என பழனிசாமி கூறவில்லை. அ.தி.மு.க., யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை பழனிசாமியே தெரிவிப்பார். அண்ணாமலையின் பேச்சை நாங்கள் கண்டுகொள்வது கிடையாது என்றார்.