/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பராமரிப்பில்லாத மின்கம்பம் தொடர் மின்தடையால் அவதி
/
பராமரிப்பில்லாத மின்கம்பம் தொடர் மின்தடையால் அவதி
ADDED : ஜூலை 05, 2024 04:51 AM
காரைக்குடி: காரைக்குடி மின்வாரிய அலுவலகத்தின் கீழ் காரைக்குடி வடக்கு, தெற்கு, கிராமப் புறம் கானாடுகாத்தான், புதுவயல், கல்லல் ,கண்டரமாணிக்கம், தேவகோட்டை நகர் தேவகோட்டை கிராமப்புறம் உள்ளிட்ட பிரிவு அலுவலகங்கள் செயல்படுகின்றன. இதில், ஒரு லட்சத்து 85 ஆயிரம் வீடுகள் 30 ஆயிரம் கடைகள் மற்றும் விவசாய இணைப்பு வழங்கப்பட்டுள்ளன.
காரைக்குடி நகரின் பல இடங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்து உள்ளன. மழைக்காலங்களில் சேதமடைந்த மின்கம்பங்கள் சாய்ந்து விபத்து ஏற்படுத்துவதோடு பல நாட்கள் மின்சாரமின்றி தவிக்கும் சூழலும் நிலவுகிறது. மின்கம்பங்கள் பல பராமரிப்பின்றி செடிகள் வளர்ந்து படர்ந்துள்ளதால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.