/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்காணிப்பு இல்லாத சிறுவர் பூங்கா
/
கண்காணிப்பு இல்லாத சிறுவர் பூங்கா
ADDED : ஆக 29, 2024 11:31 PM
சிங்கம்புணரி, : சிங்கம்புணரி பேரூராட்சியில் மேலுார் ரோட்டில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.தற்போது பூங்கா சீரமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
விடுமுறை தினங்களில் பகல் நேரம் முழுவதும் திறக்கப்படும் பூங்கா, மற்ற நாட்களில் காலை மாலை மட்டும் திறக்கப்படுகிறது. விடுமுறை நாட்களில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பூங்காவிற்கு அழைத்துச் சென்று விளையாடி மகிழ்கின்றனர்.
சில மாதங்களாக இப்பூங்காவில் காதல் ஜோடிகளின் நடமாட்டம்அதிகமாக உள்ளது. வெளியூர்களில் இருந்து பலர் இப்பூங்காவில் முகாமிடுகின்றனர். அவர்களுக்கு துணையாக வரும் இளைஞர்கள் போதையுடன் பூங்காவை வலம் வருகின்றனர். இதனால் பெற்றோர்களும், பொதுமக்களும் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே விடுமுறை நாட்களில் பூங்காவில் மகளிர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடபெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

