sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கையில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கு பாராட்டு விழா

/

சிவகங்கையில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கு பாராட்டு விழா

சிவகங்கையில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கு பாராட்டு விழா

சிவகங்கையில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கு பாராட்டு விழா


ADDED : ஜூன் 30, 2024 06:39 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 06:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை, : முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகரன் 85வது பிறந்த நாள், 70 ஆண்டு பொது சேவைக்காக பாராட்டு விழாசிவகங்கையில் நடந்தது.

பாராட்டு விழாவிற்கு மூத்த வழக்கறிஞர்மோகனசுந்தரம் தலைமை வகித்தார். உலக சித்தர் ஆராய்ச்சி மைய கற்பூரசுந்தரபாண்டியன் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன், எ.ஐ.சி.சி., பச்சேரி சுந்தரராஜன், நகராட்சி தலைவர் துரை ஆனந்த்,விழாக்குழு பொருளாளர் சுந்தரமாணிக்கம், அ.தி.மு.க., கவுன்சிலர் ராஜா, த.மா.கா., முன்னாள் கவுன்சிலர்செல்வரெங்கன் முன்னிலை வகித்தனர். வேலம்மாள் கல்விக்குழும தலைவர் முத்துராமலிங்கம் துவக்க உரையாற்றினார்.

சிவகங்கை மறை மாவட்டபேராயர் லுார்து ஆனந்தம் மலர் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பெற்றுக்கொண்டார்.

குன்றக்குடி பொன்னம்பல அடிகள், ஜமாஅத் தலைவர் காஜா கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் இ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, சுதர்சன நாச்சியப்பன், பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன், மலைராம் ரெஸ்டாரண்ட் உரிமையாளர் பாண்டி வேல், அழகுமயில் ஸ்டோர்ஸ் உரிமையாளர் மனோகரன், குணசுந்தரி என்ற கண்ணகி, எஸ்.எம்.பில்டர்ஸ் சுந்தரமாணிக்கம், சிவகங்கை தமிழ்ச் சங்கம் நிறுவனத் தலைவர் ஜவஹர்கிருஷ்ணன், வழக்கறிஞர்கள் ராம்பிரபாகர், அசோக்மேத்தா, சாய் பால மந்திர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி தாளாளர் குமார், ஆர்த்தி, சண்முக பவன் போர்டிங் லாட்ஜிங் உரிமையாளர் முருகன், இண்டக்கரேட்டட் சர்வீஸ் உரிமையாளர் வசந்தகுமார், நல்லாசிரியர் கண்ணப்பன், பொறியாளர் அன்பழகன், திருப்பதி ப்ளக்ஸ் உரிமையாளர் முத்துகிருஷ்ணன், ரவிபாலா எக்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் ஞானசேகர், கேசவன் மளிகை உரிமையாளர் கேசவன், ஸ்ரீ சிவசக்தி டிரேடர்ஸ் டிரான்ஸ் போர்ட் உரிமையாளர் சமயமுத்து, தமிழாசிரியர் இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாக்குழு செயலாளர் பாரதிதாசன் நன்றி கூறினார்.

முன்னதாக நகரில் பல்வேறு இடங்களில் கோலம், மாட்டுவண்டி, குதிரைவண்டி, சைக்கிள், வில் அம்பு போட்டி, மருத்துவ முகாம், கண் சிகிச்சை, ரத்ததானமுகாம் நடந்தது.

மாற்றுதிறனாளிகளுக்கான வீல் சேர் கிரிக்கெட் போட்டி, நகரில் 15 இடங்களில்நலத்திட்ட உதவி, அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை சண்முகராஜா கலையரங்கத்தில் சிலம்பம், பேச்சு, ஓவியம், வில்வித்தை, மல்லர் கம்பம், பரதநாட்டியம், கிராமிய கலை நிகழ்ச்சி, ஆல்பர்ட் ராஜ் குழுவினர் நிகழ்ச்சி நடந்தது.

முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகரன் வாழ்க்கை வரலாறு குறித்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது.

இலக்கிய மாமணி விருது பெற்ற கவிஞர் இலக்கியா நடராஜனுக்கு ரூ.ஒரு லட்சம் பொற்கிழி வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us