/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ராகவேந்திரா கோயிலில் ஆராதனை விழா
/
ராகவேந்திரா கோயிலில் ஆராதனை விழா
ADDED : ஆக 23, 2024 04:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி சூடாமணிபுரம், காரை மந்த்ராலயத்தில் ஆராதனை விழா மற்றும் ராகவேந்திர ஸ்வாமி ஆராதனை விழா நடந்தது.
கடந்த ஆக.19 ஆம் தேதி சத்திய நாராயண பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து அபிஷேகம், அலங்காரம், மூல ராமர் பூஜை, மந்திர புஷ்பம், ஸ்வஸ்தி உள்ளிட்ட பூர்வ ஆராதனை, நேற்று முன் தினம் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், பஞ்ச சூக்த பாராயணம், பல்லக்கு சேவை, ஊஞ்சல் சேவை உள்ளிட்ட மத்ய ஆராதனை நடந்தது.
நேற்று காலை பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம், மூல ராமர் பூஜை மங்கள ஹாரத்தி நடந்தது.
பூஜைகளை முசிறி ரமேஷ் நடத்தி வைத்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

