/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் இன்று யாகசாலை பூஜைகள் துவக்கம் ஆக.22 ல் கும்பாபிேஷகம்

ADDED : ஆக 19, 2024 12:35 AM

இளையான்குடி : இளையான்குடி அருகே தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோயிலில் ஆக., 22 ம் தேதி கும்பாபிஷேக விழா இன்று யாகசாலை பூஜை துவக்கத்துடன் தொடங்குகிறது.
இங்குள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் 10 நாட்கள் பொங்கல் விழா நடைபெறும். இவ்விழா நாட்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவர்.
பக்தர்கள் கரும்பு தொட்டில், தீச்சட்டிகள் எடுத்தல், ஆயிரங்கண் பானை, அங்கப்பிரதட்சணம், முடி காணிக்கை உட்பட பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். மேலும் வெள்ளி, செவ்வாய்,ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். இக்கோயிலில் கும்பாபிேஷகம் நடத்துவதற்காக கோயில் சீரமைப்பு பணிகள் நடந்தது.
இப்பணிகள் முடிவுற்ற நிலையில் கும்பாபிேஷகத்திற்கான விக்னேஸ்வர பூஜை, முதல் கால யாகசாலை பூஜைகள் இன்று துவங்குகிறது. இங்கு, 6 கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, ஆக., 22ல் காலை 8:00 மணியில் இருந்து 9:15 மணிக்குள் கோபுர கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி, கும்பாபிேஷகத்தை நடத்தி வைக்கின்றனர்.
பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் தலைமையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.