ADDED : ஜூலை 27, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
தேவகோட்டை, ஜூலை 28 -
தேவகோட்டை அண்ணா நகர் முதல் வீதி பாலாஜி.45., இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் மாலை தேவகோட்டை வந்தார். எதிரே ஐதராபாத்தை சேர்ந்த விக்னேஷ் 36., காரில் ராமேஸ்வரம் சென்று திரும்பி உள்ளார். உடப்பன்பட்டி விலக்கு அருகே வரும்போது விக்னேஷ் கார் பாலாஜி ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்தது. பாலாஜி சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.
விக்னேஷை கைது செய்து தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
