ADDED : மார் 08, 2025 05:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : தேசிய வங்கி கிளைகளில் பணிநிரந்தரம், 5 நாட்கள் வேலை அமல்படுத்தக்கோரி சிவகங்கையில் அனைத்து வங்கி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தேசிய வங்கி கிளைகளில் தற்காலிக ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். வங்கியில் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை வழங்க வேண்டும். புதிய பணி நியமனம் செய்ய வேண்டும்.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது, வங்கி ஊழியர்களுக்கு பணிக்கொடை ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். அனைத்து வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் பிரேம் ஆனந்த் தலைமை வகித்தார்.
நகை மதிப்பீட்டாளர் சங்க மாநில தலைவர் மகேஷ்பாபு உட்பட ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.