/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் பா.ஜ., வாக்குவாதம்
/
மானாமதுரையில் பா.ஜ., வாக்குவாதம்
ADDED : மார் 05, 2025 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை நகராட்சியில் புதிதாக கட்டப்பட்ட கடைகளுக்கு முறையாக டெண்டர் விட கூறி பா.ஜ.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மானாமதுரையில் புதியதாக வணிக வளாகம் கட்டப்பட்டு கடைகளை ஒதுக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. முறைகேடு நடைபெறுவதாக பா.ஜ., ஒன்றிய தலைவர் ஞானசுந்தரி, முன்னாள் ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: அரசு விதிமுறைப்படி ஏற்கனவே அங்கு கடைகளை நடத்தி வந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகளை ஒதுக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை என்றனர்.