/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பள்ளி வளாகத்தில் கழிப்பறை பா.ஜ.,எதிர்ப்பு: மாநகராட்சி முற்றுகை
/
பள்ளி வளாகத்தில் கழிப்பறை பா.ஜ.,எதிர்ப்பு: மாநகராட்சி முற்றுகை
பள்ளி வளாகத்தில் கழிப்பறை பா.ஜ.,எதிர்ப்பு: மாநகராட்சி முற்றுகை
பள்ளி வளாகத்தில் கழிப்பறை பா.ஜ.,எதிர்ப்பு: மாநகராட்சி முற்றுகை
ADDED : பிப் 25, 2025 06:54 AM
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் அருகே அரசு பள்ளி வளாகத்தில் கழிப்பறை கட்டும் பணிக்கு பா.ஜ.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பக்தர்கள் சேவைக்குழு கழிப்பறையை விரைந்து கட்ட கோரி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. கழிப்பறை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து மாநகராட்சி சார்பில் பள்ளி அருகே கழிப்பறை கட்டும் பணிக்கான ஏற்பாடு நடந்தது.
பள்ளி விளையாட்டு மைதானத்தில் கழிப்பறை கட்டுவதற்கு பா.ஜ.,வினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்தனர். நேற்று தாசில்தார் முன்னிலையில் சமாதான கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. பா.ஜ., மாவட்ட தலைவர் பாண்டித்துரை தலைமையில் வந்தனர். ஆனால் அதிகாரிகள் கலந்து கொள்ளாததால் தாசில்தார் ராஜா கூட்டத்தை ஒத்தி வைத்தார்.
பா.ஜ., மாவட்ட தலைவர் பாண்டித்துரை கூறுகையில்: கழிப்பறை அவசியம் தான். ஆனால், பள்ளி வளாகத்தில் கட்டக்கூடாது. வேறு இடத்தை தேர்வு செய்து கோயிலுக்கு அருகில் கழிப்பறை கட்ட வேண்டும். மாநகராட்சி கமிஷனர் கலந்து கொள்ளவில்லை என்று கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சமாதான கூட்டம் நடத்தவில்லை என்றால் போராட்டம் நடக்கும்.
மாநகராட்சி அலுவலகம் முற்றுகை
கோயில் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. கடந்த ஆண்டே பணி நடைபெறும் என்று அறிவித்த நிலையில் இதுவரை நடைபெறவில்லை.
தவிர, தற்போது தொடங்கப்பட்ட பணியும் கைவிடப்பட்டதாக கூறியதை கண்டித்து பொது மக்கள், சேவைக்குழுவினர், பக்தர்கள் உட்பட ஏராளமானோர் நேற்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.
தாசில்தார் ராஜா கூறுகையில்: கழிப்பறை கட்டப்பட உள்ள இடம் அரசுக்கு சொந்தமானது. திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் பயன்பாட்டிற்காக கழிப்பறை கட்டப்பட உள்ளது. மற்ற நாட்களில் மாணவர்கள் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பள்ளி வளாகத்தில் கழிப்பறை கட்ட எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., வினர் போராட்டம் அறிவித்தனர், சமாதான கூட்டம் நடைபெற இருந்த நிலையில், தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.