/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கூட்டணி கட்சிகளுக்கு பா.ஜ., வழிவிட வேண்டும்
/
கூட்டணி கட்சிகளுக்கு பா.ஜ., வழிவிட வேண்டும்
ADDED : ஏப் 12, 2024 10:50 PM
திருக்கோஷ்டியூர்: கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம், பட்டமங்கலம் கிராமங்களில் சிவகங்கை தொகுதி காங்.. வேட்பாளர் கார்த்தியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சிதம்பரம் பேசியதாவது:
பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., போன்ற ஜாதி அமைப்பு தான் உள்ளது.தேர்தல் அறிக்கை கூட வெளியிடவில்லை. மோடியின் 10 ஆண்டு ஆட்சியில். அவர் 2 சொத்துக்களை மக்களுக்கு வைத்துள்ளார். ஒன்று விலைவாசி உயர்வு. அடுத்து வேலை வாய்ப்பில்லாதது. பா.ஜ., இனி வழிவிட வேண்டும். அடுத்த கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யட்டும்.
பெண்களுக்காக துவக்கப்பட்ட பெண்கள் மட்டுமே பணியாற்றிய வங்கி லாபம் ஈட்டிய போதும் மூடப்பட்டது. மீண்டும் துவக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

