/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்ணை கட்டி இசைக்கருவி வாசித்து சிறுவர்கள் சாதனை
/
கண்ணை கட்டி இசைக்கருவி வாசித்து சிறுவர்கள் சாதனை
ADDED : ஆக 15, 2024 04:57 AM

காரைக்குடி : காரைக்குடியில் மெட்லி ஸ்கூல் ஆப் மியூசிக் பள்ளியில், இசை கற்று வருபவர்கள் புதுக்கோட்டையைச் சேர்ந்த கண்ணன் மகன் தீபக் 12, முருகேசன் மகன் ஹரிதர்ஷன் 13. கண்ணைக் கட்டிக்கொண்டு தீபக் டிரம்ஸ் வாசித்தும், ஹரிதர்ஷன் கீபோர்ட் வாசித்தும் பயிற்சி பெற்று வந்தனர்.
இவர்களின், இந்த சாதனை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனம் சார்பில் நடுவர் சகாயராஜ், இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் முன்னிலையில் நடந்தது.
மாணவர்கள் இருவரும் 30 நிமிடங்கள் கண்களை கட்டிக்கொண்டு பாடல்களை வாசித்து அசத்தினர். மாணவர்களின் சாதனையை அங்கீகரித்து, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனம் சான்றிதழ் வழங்கியது. மாணவர்களை, கீபோர்ட் ஆசிரியை ரமாமணி, டிரம்ஸ் ஆசிரியர் ரகுநாத், இசைப் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் வாழ்த்தினர்.