/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சீர்மரபினர் நலத்திட்ட உதவி பெற அழைப்பு
/
சீர்மரபினர் நலத்திட்ட உதவி பெற அழைப்பு
ADDED : ஜூலை 02, 2024 10:05 PM

சிவகங்கை: சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினராகி நலத்திட்ட உதவிகளை பெறலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம் சார்பில் 2008 முதல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. விபத்து காப்பீட்டு திட்ட உதவி, இயற்கை மரணம், ஈமச்சடங்கு செலவு, கல்வி, திருமணம், மகப்பேறு உதவி தொகை, மூக்கு கண்ணாடி செலவு, முதியோர் பென்ஷன் வழங்கப்படுகிறது.
இதில் பயன்பெற சீர்மரபினர் வயது 18 முதல் 60 க்குள் இருக்க வேண்டும். அமைப்பு சாரா நிறுவனத்தில் பணிபுரியாத குடும்பத்தில் ஒருவர் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெறலாம்.
ஏற்கனவே உறுப்பினராக பதிவு செய்தவர்கள், உறுப்பினர் பதிவினை புதுப்பித்து கொள்ள, சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று, பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.