/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சமூக நலத்துறையில் வழக்கு பணியாளர் பணி; விண்ணப்பம் வரவேற்பு
/
சமூக நலத்துறையில் வழக்கு பணியாளர் பணி; விண்ணப்பம் வரவேற்பு
சமூக நலத்துறையில் வழக்கு பணியாளர் பணி; விண்ணப்பம் வரவேற்பு
சமூக நலத்துறையில் வழக்கு பணியாளர் பணி; விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஜூன் 27, 2024 11:31 PM
சிவகங்கை : பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிக அடிப்படையில் வழக்கு பணியாளராக பணிபுரிய விண்ணப்பம் வரவேற்பதாக மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: சமூக நலன், மகளிர் உரிமை துறையின் கீழ் சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில், பெண்களை வன்முறையிலிருந்து பாதுகாப்பதற்கென மத்திய அரசின் சிறப்பு திட்டமான ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்படுகிறது.
இம்மையத்தின் கீழ் தொகுப்பூதிய அடிப்படையில் வழக்கு பணியாளர் நியமிக்கப்பட உள்ளனர். இப்பணியில் சேர கல்வி தகுதி பி.எஸ்.டபிள்யூ இளங்கலை அல்லது எம்.எஸ்.டபிள்யூ., முதுகலை பட்டம் (சமூக நல பணிகள்). வன்முறைக்கு உள்ளான பெண்களுக்கு உதவிபுரியும் பணியில் அரசு, அரசு சாரா நிறுவனத்தில் ஆற்றுபடுத்துதல் பணியில் ஒரு ஆண்டு அனுபவம் அவசியம்.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுழற்சிமுறையில் தங்கி பணிபுரிபவராக இருத்தல் வேண்டும். பெண்களிடம் இருந்து மட்டுமே விண்ணப்பம் வரவேற்கப்படும். வயது 2024 ஜூலை 1 அன்று 21 வயது நிரம்பியும், 35 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். மாதம் தொகுப்பூதியமாக ரூ.18,000 வழங்கப்படும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஜூலை 3 ம் தேதி மாலை 5:45 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலகம், சிவகங்கை என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

