/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம்
/
சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம்
ADDED : ஆக 20, 2024 07:15 AM
காரைக்குடி : சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சில் கூட்டம் நடந்தது.
தலைவர் சரண்யா தலைமை வகித்தார். பி.டி.ஓ., ராஜேஷ் குமார், பொறியாளர் சரவண முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் காரைக்குடியை மாநாகராட்சியாக தரம் உயர்த்தியதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
கொத்தமங்கலம், செட்டிநாடு, வடகுடி ஊராட்சிகளை கானாடுகாத்தான், பள்ளத்துார் பேரூராட்சியுடன் இணைக்கும் திட்டம் உள்ளதா என கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் கொத்தமங்கலம் ஊராட்சி பகுதியில் பாலம் கட்ட வேண்டும்.
சங்கராபுரம் ஊராட்சியில் தெருவிளக்கு வசதி இல்லை. சங்கராபுரம் ஊராட்சி வேடன் நகர் பகுதி மக்களுக்கு இடம் வழங்கியுள்ளனர். விரைந்து அவர்களுக்கு வீடுகள் கட்டித்தர அரசு முன்வரவேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

