ADDED : ஜூலை 19, 2024 11:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா ஜூலை 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழா நாட்களின் போது சுவாமி வீதி உலா நடைபெற்றது. நேற்று சுந்தரபுரம் கடைவீதி மண்டகப்படிக்கு பல்லக்கில் வீரஅழகர் எழுந்தருளினார். முன்னதாக மண்டகப்படி நிர்வாகிகள் சுவாமியை மண்டகப்படிக்கு அழைத்து வந்தனர்.
நேற்று இரவு பூப்பல்லக்கில் வீர அழகர் வீதி உலா வந்தார். தேரோட்டம் நாளை மாலை 6:00 மணிக்கும், 22ஆம் தேதி பட்டத்தரசி கிராம மண்டகப்படியில் தீர்த்தவாரி உற்ஸவ நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.