/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சதுர்வேதமங்கலம் கோயில் காளை இறப்பு
/
சதுர்வேதமங்கலம் கோயில் காளை இறப்பு
ADDED : ஆக 25, 2024 04:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சதுர்வேதமங்கலம் கூந்தலுடைய ஐயனார் கோயில் காளை உடல் நலக்குறைவால் நேற்று இறந்தது.
இக்கிராமத்தில் நடக்கும் வைகாசி திருவிழா, தைப்பொங்கல் விழாக்களில் இக்காளைக்கு கிராமத்தினர் பட்டம் கட்டி வழிபாடு நடத்துவர். கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு மஞ்சுவிரட்டுகளில் பங்கேற்று ஏராளமான பரிசுகளை இக்காளை பெற்றுள்ளது. நேற்று காளை இறந்தது.
புரவிக்களத்தில் காளை வைக்கப்பட்டு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். ஐயனார் கோயில் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

