ADDED : ஆக 15, 2024 03:58 AM

சிவகங்கை, : திருப்புவனம், கல்லல், காளையார்கோவிலில் நாளை (ஆக.,16) 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நடைபெறுவதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:
திருப்புவனம் வட்டாரத்தில் டி.வேலாங்குளம், புலியூர், சயனாபுரம், காஞ்சிரங்குளம், பொட்டப்பாளையம், வெள்ளலுார், சொட்டதட்டி, பாட்டம், இலந்தைக்குளம், முக்குடி, கொந்தகை, கீழடி கிராமங்களுக்கு பசியாபுரம் மதுரன் திருமண மகால், கல்லல் வட்டாரத்தில் ஆலங்குடி, இளங்குடி, களிப்புலி, கல்லுப்பட்டி, கோவிலுார், பரத்தகுடி, எஸ்.ஆர்.,பட்டிணம், தளக்காவூர், விசாலயன்கோட்டை ஆகிய கிராமங்களுக்கு கோவிலுார் ஆண்டவர் திருமண மண்டபம், காளையார்கோவில் வட்டாரத்தில் கொல்லங்குடி, விட்டனேரி, முத்துார், வாணியன்குடி, கவுரிபட்டி, அல்லுார், சூரக்குளம்புதுக்கோட்டை, மேலமங்கலம் ஆகிய கிராமங்களுக்கு கொல்லங்குடி கதிரேசன் கமலாவதி திருமண மண்டபத்தில் காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை முகாம் நடைபெறும். இதில் பொதுமக்கள் மனுக்களை அளிக்கலாம்.