/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டை கோயில்களில் சித்ரா பவுர்ணமி
/
தேவகோட்டை கோயில்களில் சித்ரா பவுர்ணமி
ADDED : ஏப் 23, 2024 11:58 PM

தேவகோட்டை,- தேவகோட்டை ராம்நகர் ஆலமரத்து முனீஸ்வரர் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா கடந்த வாரம் காப்புகட்டுதலுடன் தொடங்கியது. தினமும் முனீஸ்வரர், காளியம்மன் உட்பட பரிவார சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிலம்பணி சப்பாணி முனீஸ்வரர் கோயிலில் முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன. நேற்று காலை பக்தர்கள் பால்குடம், சந்தனக்குடம், வேல்காவடிகள், எடுத்து வந்து தீமிதித்து பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தர்ம முனீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன. பெண்கள் விளக்கு பூஜை செய்து வழிபட்டனர். நேற்று பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அரசரடி மகாலிங்கம் முனீஸ்வரர் பத்ர காளியம்மன் கோயிலில் நேற்று சிறப்பு ஹோமத்தை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன.
சிங்க முக காளிகா பரமேஸ்வரி கோயிலில் தினமும் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன. நேற்று பக்தர்கள் திருமஞ்சன குடம், பால்குடம் எடுத்து வந்து பூக்குழி இறங்கி பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தி.ராம.சாமி. கோவிலில் வேலிற்கு சிறப்பு பூஜை நடந்தது. சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயிலில் அம்மனுக்கும், மற்றும் அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன.

