/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆக.25க்குள் முதல்வர் கோப்பை விண்ணப்பம் கலெக்டர் ஆஷா அஜித் தகவல்
/
ஆக.25க்குள் முதல்வர் கோப்பை விண்ணப்பம் கலெக்டர் ஆஷா அஜித் தகவல்
ஆக.25க்குள் முதல்வர் கோப்பை விண்ணப்பம் கலெக்டர் ஆஷா அஜித் தகவல்
ஆக.25க்குள் முதல்வர் கோப்பை விண்ணப்பம் கலெக்டர் ஆஷா அஜித் தகவல்
ADDED : ஆக 07, 2024 06:29 AM
சிவகங்கை, : முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் மாவட்ட, மண்டல, மாநில அளவில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் ஆக., 25 க்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: முதல்வர் கோப்பைக்கான மாவட்ட, மண்டல, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் 5 பிரிவுகளில் செப்., மற்றும் அக்டோபரில் நடைபெற உள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளாக 27 விதமான போட்டிகள் நடத்தப்பட உள்ளன. தனிநபர் போட்டியில் மாநில அளவில் முதல் பரிசு ரூ.1 லட்சம், 2ம் பரிசு ரூ.75,000, ௩ம் பரிசு ரூ.50,000 வழங்கப்படும். குழு போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.75,000, ௨ம் பரிசு ரூ.50,000, ௩ம் பரிசு ரூ.25,000 வழங்கப்படும். இந்த ஆண்டு 4ம் பரிசும் வழங்கப்பட உள்ளது.
போட்டி வயது 12 முதல் 19 வரை பள்ளி மாணவர்களுக்கும், வயது 17 முதல் 25 வரையிலான கல்லுாரி மாணவர்களுக்கும், வயது 15 முதல் 35 வரையிலான பொது பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் நடத்தப்பட உள்ளது.
பங்கேற்க ஆக., 25க்குள் sdat.tn.gov.in ல் முன்பதிவு செய்ய வேண்டும். விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 74017 03503 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.