ADDED : மே 18, 2024 06:12 AM
சிவகங்கை : சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் கோடை கால பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. கல்வித்துறை சார்பில் இங்கு மே 8 முதல் நேற்று வரை 10 நாட்கள் கோடைகால பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் 130 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இசை, சதுரங்கம், கையெழுத்து, ஓவியம், ஆங்கில பேச்சு பயிற்சி, திருக்குறள் ஒப்பிவித்தல் ஆகிய பயிற்சி வழங்கப்பட்டன. கல்வித்துறை அரங்கில் நடந்த நிறைவு விழாவிற்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) எம்.உதயகுமார் வரவேற்றார். சி.இ.ஓ., பி.ஏ., சம்பத்குமார் உட்பட கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அரங்கில் மாணவர்கள் அமைத்த ஓவியம், கலைப்பொருட்களை பார்வையிட்டு, பாராட்டு சான்றுகளை கலெக்டர் வழங்கினார். மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) எஸ்.மாரிமுத்து நன்றி கூறினார். ஒருங்கிணைப்பாளர் சுகன்யா தலைமையில் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

