நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சாலைக்கிராமத்தில் குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் சோதனையில் 1250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்டவரை கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., சிவபிரகாசம் உள்ளிட்ட போலீசார் சாலைக்கிராமம் பஸ் ஸ்டாப் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த நான்கு சக்கரவாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 52 மூடையில் 1250 கிலோ ரேஷன் புழுங்கல் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஈடுபட்ட சாலைக்கிராமம் வைரவசுந்தரம் மகன் மணிமுத்துவை 28 கைது செய்து மேலும் தப்பியவரை தேடி வருகின்றனர்.