/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரியில் ஓயாத மாடு பிரச்னை கைவிடப்படும் கடலை விவசாயம்
/
சிங்கம்புணரியில் ஓயாத மாடு பிரச்னை கைவிடப்படும் கடலை விவசாயம்
சிங்கம்புணரியில் ஓயாத மாடு பிரச்னை கைவிடப்படும் கடலை விவசாயம்
சிங்கம்புணரியில் ஓயாத மாடு பிரச்னை கைவிடப்படும் கடலை விவசாயம்
ADDED : ஜூன் 13, 2024 05:59 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் பெருகி வரும் கோயில் மாடுகளால் விவசாயிகள் பலர் கடலை விவசாயத்தை கைவிடும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
இங்குள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலுக்கு பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்தும் மாடுகள் சுற்று வட்டாரத்தில் பெருகி திரிவதுடன், விவசாயத்தையும் பாழாக்கி வருகிறது. சாலையில் படுத்திருக்கும் மாடுகளின் மீது வாகனங்கள் மோதி விபத்து நடக்கிறது. இதனால் மனிதர்களுக்கும், மாடுகளுக்கும் சேதாரம் ஏற்படுகிறது. இம்மாடுகளால் தங்கள் விவசாயம் பாதிக்கப்படுவதாக சுற்று வட்டார கிராம விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோசாலையை விரிவுபடுத்தி அனைத்து மாடுகளையும் அடைத்து வைத்து பராமரிக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் கோயில் மாடுகள் குறித்த பல ஆண்டு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என விவசாயிகளும் நம்பினர். ஆனால் கோயில் மாடுகள் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
இதனால் இந்தாண்டு ஒடுவன்பட்டி, பிரான்மலை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கடலை சாகுபடியை கைவிட்டுள்ளனர். அடுத்து வரவிருக்கும் நெல் சாகுபடியும் என்ன ஆகுமென்று தெரியவில்லை என்கிறார்கள் விவசாயிகள். எனவே கோயில் மாடுகளை விரைந்து பிடித்து அடைத்து வைத்து பராமரிக்கவேண்டும்.