/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பூச்சித்தாக்குதலால் கத்தரி விளைச்சல் பாதிப்பு
/
பூச்சித்தாக்குதலால் கத்தரி விளைச்சல் பாதிப்பு
ADDED : ஜூலை 22, 2024 04:57 AM

சிங்கம்புணரி: எஸ்.புதுார் அருகே பூச்சி தாக்குதலால் கத்தரி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வொன்றியத்தில் விவசாயிகள் சிலர் போர்வெல் தண்ணீரை பயன்படுத்தி கோடை பயிராக கத்தரி நடவு செய்திருந்தனர். இதற்காக துவரங்குறிச்சி, கொட்டாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து நாற்றுகளை வாங்கி நடவு செய்த நிலையில் செடிகள் நன்கு வளர்ந்திருந்தது. காய்க்கும் நிலையில் வெயில், மழை காரணமாக பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் விளைச்சல் கடுமையாக பாதித்துள்ளது. இதுவரை மூன்று எடுப்பு வரை காய்கள் பறித்திருக்க வேண்டும். ஆனால் பெரிய அளவில் காய்ப்பு இல்லை. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். சிலர் பூச்சி தாக்குதலை சமாளிக்க செடிகளில் பூச்சி மருந்துகளை அடித்து வருகின்றனர், ஆனாலும் பயன் இல்லை என்று கூறுகின்றனர்.