/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கனமழையால் காவிரி திட்ட சுற்றுச்சுவர் சேதம்
/
கனமழையால் காவிரி திட்ட சுற்றுச்சுவர் சேதம்
ADDED : ஆக 22, 2024 02:49 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் பெய்த கனமழையால் காவிரி குடிநீர் திட்ட சுற்றுச்சுவர் சரிந்து விழுந்தது.
மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களுக்கும் காவிரி குடிநீரை கொண்டு செல்ல சிங்கம்புணரி ஒன்றியம் தேனம்மாள்பட்டியில் குடிநீர்த் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இத்தொட்டியை சுற்றி பல மீட்டர் தூரத்திற்கு காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டது. கடந்த சில தினங்களாக இப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக காம்பவுண்ட் சுவர் சில இடங்களில் சாய்ந்தது.
அருகில் குடியிருப்பு இருந்தும், மக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில் அசம்பாவிதங்கள் எதுவும் இல்லை. இதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கிராவல் மண்ணை அதிகாரிகள் தற்காலிகமாக இடம் மாற்றி வருகின்றனர். மலை அடிவாரத்தில் ஊற்று நீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதி என்பதால் சுற்றுச்சுவரை தரமானதாக கட்ட அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.