/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் கூடுதலாக 34 துாய்மை பணியாளர் அவசர கூட்டத்தில் முடிவு
/
சிவகங்கையில் கூடுதலாக 34 துாய்மை பணியாளர் அவசர கூட்டத்தில் முடிவு
சிவகங்கையில் கூடுதலாக 34 துாய்மை பணியாளர் அவசர கூட்டத்தில் முடிவு
சிவகங்கையில் கூடுதலாக 34 துாய்மை பணியாளர் அவசர கூட்டத்தில் முடிவு
ADDED : பிப் 22, 2025 06:24 AM
சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் 60 நிரந்தர துாய்மை பணியாளர்கள் உள்ள நிலையில் மேலும், 34 பேரை நியமிக்க கவுன்சில் அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
சிவகங்கை நகராட்சியின் கீழ் 27 வார்டுகளில் 14,771 குடியிருப்புகள் உள்ளன. மாவட்ட தலைநகரான இந்நகரின் மொத்த மக்கள் தொகை 43,990.
இது தவிர 1,032 வணிக நிறுவனம், வாரச்சந்தை, உழவர் சந்தை, 100 கடைகள் கொண்ட நேருபஜாரில் தினசரி சந்தை, 36 திருமண மண்டபங்கள், 10 ஓட்டல்கள், 2 தியேட்டர்கள் செயல்படுகின்றன.
நகரில் 6.8 கி.மீ., நீளத்திற்கு முக்கிய சாலைகள், 85.44 கி.மீ., துாரத்திற்கு தெருக்கள், 48.44 கி.மீ., துாரத்திற்கு கால்வாய்களும் உள்ளன.
நகரில் 43,990 குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் இருந்து தினமும் 22.20 டன் குப்பை சேகரமாகின்றன. குப்பை வாங்கும் பணி தனியாரிடம் டெண்டர் விடப்பட்டாலும், அவர்கள் முழுமையாக வீடுகள், தெருக்கள் தோறும் குப்பை அகற்றும் பணியை மேற்கொள்வதில்லை.
இதனால், நகராட்சியில் நிரந்தர துாய்மை பணியாளர்கள் 60 பேரை வைத்து தொடர்ந்து துாய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதனால் இந்நகராட்சியில் கூடுதலாக 34 துாய்மை பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
அவசர கவுன்சில் கூட்டம்
இந்நிலையில் கூடுதலாக 34 துாய்மை பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க தீர்மானம் நிறைவேற்றும் பொருட்டு, நேற்று சிவகங்கை நகராட்சியில் அவசர கூட்டம் நடந்தது.
கவுன்சிலர்கள் தனித்தனியாக சென்று கூட்ட தீர்மானத்தில் கையெழுத்துவிட்டு சென்றதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

