/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தாமதம் புதிய வாகனத்திற்கு ஆர்.சி., புக் வழங்கல் ரீ சார்ஜ் கார்டு வராததால் காரைக்குடியில் பாதிப்பு
/
தாமதம் புதிய வாகனத்திற்கு ஆர்.சி., புக் வழங்கல் ரீ சார்ஜ் கார்டு வராததால் காரைக்குடியில் பாதிப்பு
தாமதம் புதிய வாகனத்திற்கு ஆர்.சி., புக் வழங்கல் ரீ சார்ஜ் கார்டு வராததால் காரைக்குடியில் பாதிப்பு
தாமதம் புதிய வாகனத்திற்கு ஆர்.சி., புக் வழங்கல் ரீ சார்ஜ் கார்டு வராததால் காரைக்குடியில் பாதிப்பு
ADDED : ஏப் 28, 2024 06:04 AM
காரைக்குடி : காரைக்குடி வட்டாரத்தில், கடந்த ஒரு மாதமாக புதிய வாகனத்திற்கான ஆர்.சி.,புக் கிடைக்காமல் வாகன உரிமையாளர்கள் சிரமப்படுகின்றனர்.
காரைக்குடி பத்திரப்பதிவு அலுவலகம் அருகே புதிதாக ரூ.1.93 கோடி செலவில் மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகம் கட்டப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்டது. மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகம் தொடங்கிய நாள் முதல் தற்போது வரை, கார், இருசக்கர வாகனம், கனரக வாகனங்கள் என 2 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2024ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து தற்போது வரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தற்போது ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவுச் சான்று ஆகியவற்றை பொதுமக்கள் நேரில் சென்று பெறுவதை தவிர்க்கும் விதமாக போஸ்ட் ஆபீஸ் மூலம் நேரடியாக வீட்டிற்கு அனுப்பும் பணி கடந்த பிப்ரவரியில் தொடங்கியது.
காரைக்குடி வட்டாரத்தில், பதிவுச் சான்றிதழ் ரத்து, பெயர் மாற்ற பதிவுச் சான்றிதழ் மற்றும் புதிய பதிவு சான்றிதழ் கிடைக்காமல் கடந்த ஒரு மாதமாக வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இதற்கு முறையான காரணம் தெரியாமல் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கும், ஷோரூம்களுக்கும் வாடிக்கையாளர்கள் அலைகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம் வெளியிட்ட அறிக்கையில் போஸ்ட் ஆபீஸ் மூலம் வாகன பதிவுச் சான்று 99 சதவீதம் உரிய நபர்களுக்கு அனுப்பப்பட்டதாகவும், 1 சதவீத பதிவு சான்றிதழ் மட்டுமே உரிய நபர்களுக்கு சென்றடையவில்லை என்றும் அதற்கு காரணம் விண்ணப்பத்தின் முகவரியை சரியாக குறிப்பிடாததே என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், ஸ்மார்ட் கார்டு அடிப்பதற்கு ரீசார்ஜ் செய்யாமல் காரைக்குடி வட்டாரத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 900 க்கும் மேற்பட்ட வாகன பதிவுச் சான்றிதழ் வழங்கப்படாமல் உள்ளது.
எனவே, உடனடியாக வாகன உரிமையாளர்களுக்கு ஆர்.சி., புக் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் கூறுகையில்;
சிவகங்கை மாவட்டத்தில் ஸ்மார்ட் கார்டு வடிவிலான ஆர். சி .,புக் வழங்கப்படுகிறது.
ரீசார்ஜ் கார்டு அனுப்பாததோடு, சில மிஷின் பிரச்னையும் உள்ளது. விரைவில் சரி செய்யப்பட்டு ஓரிரு நாட்களில் முறையாக ஆர்.சி., அனுப்பப்படும் என்றார்.

