/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பயனில்லா ஆழ்துளைக் கிணறு முழுமையாக மூட கோரிக்கை
/
பயனில்லா ஆழ்துளைக் கிணறு முழுமையாக மூட கோரிக்கை
ADDED : செப் 12, 2024 04:52 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் பிரபாகர் காலனியில் போதிய நீர் ஆதாரம் இல்லாத இரண்டு ஆழ்துளைக் கிணறுகளை முழுமையாக மூட கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்புத்துார் நகர் காந்திநகரை அடுத்து உள்ளது பிரபாகர் காலனி. இங்கு சில மாதங்களுக்கு முன்பாக மதுரை வீரன் கோயில் அருகில் இரு ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது.
ஆனால் போதிய நீர் ஆதாரம் இல்லை என்று அவை மூடப்பட்டன. அண்மையில் தொடர் மழையை அடுத்து, ஆழ்துளைக் போடப்பட்ட பகுதியில் மண் இறங்கத் துவங்கியுள்ளது. குடியிருப்பு பகுதியில் குழந்தைகள் விளையாடும் போது தவறி உள்ளே விழும் அபாயம் உள்ளது.
கவுன்சிலர் ஏகாம்பாள் கூறுகையில், திருப்புத்துார் 15 வது வார்டு பிரபாகர் காலனியில் மூடப்பட்ட ஆழ்துளைக் கிணறு அருகில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இரண்டு ஆழ்துளை கிணறுகளை முழுமையாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.