நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி; புதுவயல் ஸ்ரீ வித்யா கிரி மெட்ரிக் பள்ளியில், செந்நிலா சதுரங்க கழகம் மற்றும் சிவகங்கை மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் செஸ் போட்டி நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் மணிமாறன் வரவேற்றார்.
மாவட்ட சதுரங்க கழக துணைத் தலைவர் சேவு . முத்துக்குமார் தலைமையேற்றார். செந்நிலா சதுரங்க கழக இயக்குனர் கார்த்தி முன்னிலை வகித்தார். மாநில சதுரங்க கழக இணைச் செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் பிரகாஷ் போட்டியை துவக்கி வைத்தனர்.
இணைச் செயலாளர் ராமு, தொழிலதிபர்கள் சிவக்குமார் பூமிநாதன்,செந்திலா சதுரங்க கழக தலைவர் தனலெட்சுமி பேசினர். வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.