/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இண்டியா கூட்டணி வென்றால் பன்முகத்தன்மை காப்பாற்றப்படும் * ப.சிதம்பரம் பேட்டி

ADDED : ஏப் 20, 2024 02:15 AM

காரைக்குடி:''இண்டியா கூட்டணி வென்றால் பன்முகத்தன்மை நிச்சயம் காப்பாற்றப்படும்,'' என, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் கண்டனுார் பேரூராட்சி சிட்டாள் ஆச்சி நினைவு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஓட்டளித்தார்.
பின் அவர் கூறியதாவது: தமிழகத்தில் தி.மு.க., தலைமையில் இண்டியா கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். சிவகங்கை லோக்சபா தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பார்வையிட்டேன். தொடர்ந்து ஓட்டுச்சாவடி மைய ஏஜன்ட்களையும் தொடர்பு கொண்டேன். அனைவரும் மிக உற்சாகமாக உள்ளனர். அந்த உற்சாகம் நம்பிக்கையை கொடுக்கிறது.
இண்டியா கூட்டணி வென்றால் பன்முகத்தன்மை நிச்சயம் காப்பாற்றப்படும். கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட சரிவுகளை நாங்கள் நிச்சயம் சீர் செய்வோம். இண்டியா கூட்டணி வெல்ல வேண்டும் என கூறுவதற்கு முக்கிய காரணமே பன்முகத்தன்மை காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.
இண்டியா கூட்டணி வலிமையான கூட்டணி. தேர்தலுக்குப் பிறகும் கூட்டணியை யாரும் உடைக்க முடியாது. தமிழகம், புதுச்சேரி உட்பட 40 இடங்களிலும் கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும். அமலாக்கத்துறை என்பது பா.ஜ., கூட்டணி என்பது எல்லோருக்கும் தெரியும் என்றார்.