/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் குடிநீர் திட்டப்பணி தீவிரம்; 2025 ஜனவரியில் குடிநீர் விநியோகம் துவக்கம்
/
திருப்புத்துாரில் குடிநீர் திட்டப்பணி தீவிரம்; 2025 ஜனவரியில் குடிநீர் விநியோகம் துவக்கம்
திருப்புத்துாரில் குடிநீர் திட்டப்பணி தீவிரம்; 2025 ஜனவரியில் குடிநீர் விநியோகம் துவக்கம்
திருப்புத்துாரில் குடிநீர் திட்டப்பணி தீவிரம்; 2025 ஜனவரியில் குடிநீர் விநியோகம் துவக்கம்
ADDED : மே 15, 2024 06:29 AM

திருப்புத்துார் : திருப்புத்துாரில் புதிய குடிநீர் திட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில் குடிநீர் விநியோகம் துவங்க உள்ளது.
திருப்புத்துார் பேரூராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ 21.67 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் தம்பிபட்டியில் 1.5 லட்சம் லி,, தென்மாப்பட்டில் 2 லட்சம் லி., கொள்ளளவில் மேல்நிலைத்தொட்டி, தென்மாப்பட்டு,புதுப்பட்டியில் ஒரு லட்சம் லி., கொள்ளளவில் தரைமட்டத்தொட்டியும் கட்டப்படுகிறது. உள்ளூர் குடிநீர் ஆதாரத்திற்காக 10 இடங்களில் ஆழ்குழாய் கிணறும் போடப்படுகிறது.
குடிநீர் விநியோகத்திற்கு நகர் முழுவதும் 77.64 கி.மீ. நீளத்திற்கு குழாய்கள் பதிக்கப்படுகின்றன. மேல்நிலைத்தொட்டிக்கு நீரேற்ற 5.8 கி.மீ.நீளத்திற்கு குழாய்கள் பதிக்கப்படுகின்றன.
2025 மேல் திட்டப்பணி நிறைவடையும். இத்திட்டத்தின் மூலம் 4682 புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. தற்போது நகரிலுள்ள தெருக்களில் பரவலாக 5 மண்அள்ளும் இயந்திரம் மூலம் ஒரு மீ ஆழத்தில் குழாய்பதிப்பு பணி நடந்து வருகிறது.
பேரூராட்சியிலுள்ள பகுதிகள் 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்க வசதியாக தற்போது குழாய் பதிப்பு பணி நடந்து வருகிறது.
இதுவரை 15 கி.மீ. தூரத்திற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. இரு தரை மட்டத் தொட்டிகளும் கட்டப்பட்டுள்ளன.
30 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரியில் புதிய குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மண்டல வாரியாக குடிநீர் விநியோகம் என்பதால் மேடு,பள்ளம் பாதிப்பில்லாமல் சீரான குடிநீர் விநியோகம் நடைபெறும்.

